Sangu Poo Tea: 'கிரீன் டீ' தெரியும்… அதென்ன 'ப்ளூ டீ '? சங்கு பூ தேநீரில் இவ்வளவு நன்மைகளா..?
ப்ளூ டீ-யும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு வழங்குகிறது. கிரீன் டீ போலவே கொழுப்பு குறைப்பு தொடங்கி, புற்று நோயை எதிர்க்கும் சக்தி வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம், முடி வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. இந்த ப்ளூ டீ உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், பல நோய் தொற்றுக்களிலிருந்தும் உடலை பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும், உடல் பருமனை பிரச்சனைகளுக்கு 'ப்ளூ டீ ' பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த வகை டீ அஜீரணக் கோளாறு பிரச்சினைகளை தீர்ப்பதுடன், வயிற்றில் உருவாகும் எரிச்சலையும் தடுக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -