Kiwi : கிவி பழத்தை சாப்பிடுவதை தவிர்ககாதீங்க.. இத்தனை நன்மைகளா?
கிவி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து காணப்படுகிறது. விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
கலிஃபோர்னியா மற்றும் நியூசிலாந்தில் அதிக அளவில் பயிரிடப்படும் இந்த பழம் சற்று ஏறக்குறைய 50 வகைகளில் கிடைக்கிறது.
டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கிவி பழம் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள்,ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது, இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து,இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
அதிக வைட்டமின் சி கிவி பழத்தில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -