Vitamin D: வைட்டமின் D அதிகம் உள்ள சாப்பாடுகள் என்னென்ன..? இதோ லிஸ்ட்..!

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஏராளமான வைட்டமின்ளும், புரதங்களும் தேவைப்படுகிறது. குறிப்பாக, வைட்டமின் டி மிகவும் முக்கியமானது ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வைட்டமின் டி பல வகையான நமது எலும்புகளை வலுவாக்குவதுடன் பல வகையான எலும்பு தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடியது.

போதுமான சூரிய ஒளியில் சென்று நிற்பது, அதுவும் குறிப்பாக அதிகாலை சூரிய ஒளி. வைட்டமின் டி க்கான மூலாதாரம் சூரிய ஒளிதான்.
காளான்களில் இந்த வைட்டமின் இயல்பாக காணப்படுவதில்லை. ஆனால் நன்றாக வெயிலில் உலர்ந்த காளான்களில் வைட்டமின் D அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
சால்மன் மீன் வைட்டமின் D அதிகம் உள்ள ஒரு உணவு. இந்த மீன் உங்களது ஒரு நாளைக்கான மொத்த வைட்டமின் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.
காட் லீவர் எண்ணெய் மாத்திரைகள் பொதுவாகவே வைட்டமின் D குறைப்பாட்டிற்கு பயன்படுத்தபட்டு வருகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான வைட்டமின் D இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -