கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல் ஏற்படுகிறதா..? இது தான் காரணம்..!
சுபா துரை | 15 Jan 2024 05:40 PM (IST)
1
கரும்பு இல்லாமல் பொங்கலை கடந்து விட முடியாது. பொங்கல் வந்துவிட்டால் போதும் எங்கும் கரும்பு மயம் தான்.
2
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கரும்பை விரும்பி திண்பார்கள். கடைசியில் நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவார்கள்.
3
இது எதனால் நடக்கிறது என்று தெரியுமா..? கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கிறீர்களே..அதனால் தான்.
4
கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீருடன் கலக்கும் போது தவறான வேதியியல் ரியாக்ஷன் நடக்கிறது.
5
இதனால் தான் உங்கள் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது.
6
இந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்று நினைத்தீர்கள் ஆனால், கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.