Poha Upma Recipe : சத்தான ப்ரேக்ஃபாஸ்ட் ரெசிபி..தக்காளி அவல் உப்மாவை டக்குனு செய்யுங்க!
தேவையான பொருட்கள் : அவல் - 2 கப், வேர்க்கடலை - 1/4 கப், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, தக்காளி விழுது - 3 பழம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, நெய் - 1 தேக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் அவலை கழுவி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.அதன் பின் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு அவலை சேர்த்து கலந்து, பிறகு வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான தக்காளி அவல் உப்மா தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -