Orange Juice:தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா?தெரிஞ்சிக்கோங்க!
காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா என்பது நிபுணர்களின் கருத்தை காணலாம். வைட்டமின் சி நிறைந்தது என்பதால் உடனடியாக எனர்ஜி தரக்கூடியது.
தினமும் ஆரஞ்சு பழங்கள் அல்லது ஜூஸ் குடிப்பது நன்மைதருமா என்பதை காணலாம்.
ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும். நோய் தொற்று பரவும் காலங்களில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சருமம் ஆரோக்கியமாக இருக்க ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள் உதவும். வைட்டமின் சி ஃபிரி ராடிகல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமன் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சருமம் ரேடியண்டாக இளமையாக இருக்க உதவுகிறது.
தினமும் காலை உணவுடன் ஆரஞ்சு பழம் அல்லது ஜூஸ் சாப்பிடுவது நல்லது என்றாலும் அதில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். தேன் அல்லது இயற்கையான இனிப்பு ஆகியவற்றை சேர்க்கலாம். ஆரஞ்சு பழத்துடன் கருப்பு திராட்சை, அத்திப் பழம் உள்ளிட்ட இயற்கையான இனிப்பு வகைகளை சேர்த்து சாப்பிடலாம்.