பொடுகு தொல்லையா? ஆலிவ் ஆயில் தடவி பாருங்க! மாற்றம் தெரியும்
ஆரோக்கியமான வலுவான முடிக்கு எண்ணெய் உபயோகிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் முடியை வலுவாக்கி வெப்பத்தினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு மற்றும் அளவுக்கு அதிகமாக முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது.
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் முடியில் ஈரப்பதத்தை தக்கவைப்பதன் மூலம் பொடுகு தொலையில் இருந்து பாதுகாக்கிறது. ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் முடிக்கு கிளென்ஸராக பயன்படுகிறது
உச்சந்தலையை பலப்படுத்தி அழுக்குகளை நீக்குகிறது. ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும். ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும். டீ ட்ரீ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தொடர்ந்து தடவி வந்தால் முடி வளர்ச்சியை அதிகரித்து பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -