Goat Brain Fry : முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் மட்டன் மூளை மசாலா.. விடுமுறை நாளில் செய்து வாருங்க!
தேவையான பொருட்கள்: மட்டன் மூளை - 4, தண்ணீர், நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, சின்ன வெங்காயம் - 1 கப் மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தக்காளி - 1 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தண்ணீர், மிளகு தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அதில் மட்டன் மூளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். அதன் பிறகு மூளையில் உள்ள நரம்புகளை நீங்கி சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் , நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறிவிட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரித்து வரும் வரை வதக்கவும்.
அடுத்தது இந்த மசாலா கலவையில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால் ருசியான மட்டன் மூளை மசாலா தயார்.