Cooking Tips : உங்கள் சமையலை எளிதாக்கும் அசத்தலான டிப்ஸ் இதோ!
சுபா துரை | 27 Feb 2024 12:05 AM (IST)
1
நெய் காய்ச்சும் போது சிறிது உப்பு சேர்த்து காய்ச்சினால் மணமாக இருப்பதோடு நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
2
சப்பாத்தி சாஃப்டாக வர மாவு பிசையும் போது சிறிது பால் ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
3
இட்லி மாவு மற்றும் தோசை மாவு புளித்துவிட்டால் அதனோடு ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்புத்தன்மை நீங்கிவிடுமாம்.
4
பிஸ்கட்டுகள் நமத்து போகாமல் இருக்க, ஒரு மெல்லிய துணியில் சர்க்கரையை கட்டி டப்பாவினுள் வைத்தால் பிஸ்கட் நமத்து போகாது.
5
கறிவேப்பிலை இலைகளை அரிசியோடு போட்டு வைத்தால் அரிசியில் வண்டுகள், பூச்சிகள் வராது.
6
தக்காளி சூப் சமைத்த சில மணி நேரங்களில் அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும், அதனால் சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு ஸ்பூன் சோடா மாவு சேர்க்கலாம்.