Kitchen Tips : மளிகை பொருட்களில் வண்டு அரிக்காமல் இருக்கணுமா? டிப்ஸ் இதோ!
அனுஷ் ச | 15 Jun 2024 03:03 PM (IST)
1
மிளகாய் தூளில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்தால் வண்டு பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2
சர்க்கரை டப்பாவில் மூன்று கிராம்பு போட்டு மூடி வைத்தால் எறும்பு மொய்க்காது.
3
உளுத்தம் பருப்பை பூச்சி அரிக்காமல் இருக்க 4 வர மிளகாயை உளுத்தம் பருப்போடு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
4
பருப்பு வகையில் வண்டுகள், பூச்சி அரிக்காமல் இருக்க ஒரு கடாயில் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறவைத்து மூடி வைக்க வேண்டும்.
5
அரிசியை பூச்சி வண்டு அரிக்காமல் இருக்க தேங்காய் துருவிய கொட்டாங்குச்சியை வெயிலில் காய வைத்து அரிசியில் போட்டு வைக்க வேண்டும்.