Ragi Kozhukattai : சத்து நிறைந்த ராகி கொழுக்கட்டை.. மாலையில் செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள் : ராகி மாவு - 1 கப், வெல்லம் - 1 கப், தண்ணீர் - 1/4 கப், அவல் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடித்த வேர்க்கடலை - 1/2 கப், வெல்லம், நெய் , ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி விடவும்
ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து ராகி வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரை கப் பொடியாக அரைத்த அவலை சேர்த்து வறுக்கவும்.
அடுத்தது ஒரு கப் தேங்காய் துருவல் கலந்து கொள்ளவும். அடுத்து அரை கப் பொடியாக அரைத்த வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி ராகியுடன் சேர்க்கவும். சிறிது நெய் ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
வெல்ல பாகுடன் ராகி மாவை நன்கு மிக்ஸ் செய்யவும். மாவை கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சத்தான ராகி கொழுக்கட்டை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -