Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!
வெங்காயத்தை சேமிப்பதன் முதல் விதி, அவற்றை 12 முதல் 17 டிகிரி தட்பவெப்பத்தில் சுத்தமான, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயத்தை நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது அவற்றின் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து, அவற்றின் ஆயுளை அதிகரிக்க சிறந்த வழியாகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க, காற்றோட்டம் அவசியம், எனவே அவற்றை ஒருபோதும் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, அறை வெப்பநிலையில் திறந்த கூடையில், துளையிடப்பட்ட காகிதப் பையில் அல்லது காற்றோட்டம் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
இல்லை, குளிர் மற்றும் ஈரமான சூழல் அவை கெட்டுப்போக அல்லது பூஞ்சை தாக்கத்திற்கு வழிவகுக்கும். உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வெங்காயத்தை சேமிப்பது நல்லது
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும். வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கில் புள்ளிகள் அல்லது ஈரப்பதம் இருக்கக்கூடாது,
உரிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட வெங்காயத்தை சேமிக்க, அவை மாசுபடுவதைத் தடுக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
வெங்காயத்தை தோல் உரித்து ஃப்ரீசரில் வைப்பது அவற்றை வெட்டும்போது கண் எரிச்சலைத் தவிர்க்கும். பச்சை வெங்காயத்தின்ஆயுளை அதிகரிக்க, அவற்றை ஃப்ரீஸ் வைக்கலாம். தோலுரித்த பிறகு, அவற்றை விரும்பியபடி நறுக்கி அல்லது துண்டுகளாக நறுக்கி, காற்றுப் புகாத பையில் சேமித்து வைக்கவும். இந்த முறையில் எட்டு மாதங்கள் வரை ஃப்ரீசரில் வைக்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -