Soy Milk: எலும்புகள், இதய ஆரோக்கியத்திற்கு சோயாபால் நல்லதா? நிபுணர்கள் சொல்வது இதுதான்..!
இதில் கலோரிகள் குறைவு. ஆனால், புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. லாக்டோஸ் அலர்ஜி இல்லாதவர்கள் சோயா பால் சிறந்த தேர்வாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசோயா பாலில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். சோயா பாலை தவறாமல் அருந்தும்போது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இதயத்தை வலுப்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயத்திற்கு கேடு விளைவிக்கும் செல்களை அழிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கலோரியும் குறைவு. எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ். உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சோயா பால் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் உங்கள் உணவில் சோயா பால் இருந்தால் ஹைப்பர் பிக்மென்டேஷன் நீங்கும்.
இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
இதில் உள்ள புரதச்சத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஸ்கேல்ப் உள்ள செல்கள் அழிவை மீட்டு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -