Tea : டீ பிரியரா? நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
பொன்மாலைப்பொழுதில், சூடாக ஒரு கப் டீ… வாழ்வின் அர்த்தங்களை கற்றுத்தரும் நேரமல்லவா அது!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதண்ணீருக்கு பிறகு அதிகம் குடிக்கும் ஒரு பானம் என்றால், அது ’டீ’ தான். அது தரும் புத்துணர்ச்சியை டீ பிரியர்கள் மட்டுமே அறிவார்கள்.
வாழ்வின் மிக சாதாரணமான தருணங்களை ஒரு சிறிய கொண்டாட்டமாக மாற்றும் தேநீர்
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன.
. சீனப் பேரரசர் ஷென் நங் அவரும் அவரது வீரர்களும் மரத்தடியில் தஞ்சம் புகுந்தபோது இந்த பானத்தை முதலில் சுவைத்தார்.
அவர்கள் தண்ணீர் கொதிக்க வைக்கும் போது, காற்று வீசியதால் சில தேயிலைகள் கொள்கலனில் விழுந்து கலந்தன. அப்போதுதான் டீ என்னும் பிரபலமான பானம் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டைய சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து, தேயிலை உலகின் பல பகுதிகளில் பிரதானமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு கோப்பை தேநீரும் ஒரு கற்பனையான பயணத்தை பிரதிபலிக்கிறது - கேத்தரின் டூசல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -