Beetroot pachadi: சுவையான பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
பீட்ரூட் - 3, தயிர் - ஒரு கப், துருவிய தேங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு ஸ்பூன், கடுகு - ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
பீட்ரூட் துருவி எடுக்கவும். தேங்காயையும் துருவி எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், தேங்காய், உப்பு, துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து நன்றாக வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும். அவ்ளோதான் பீட்ரூட் பச்சடி தயார்.
பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பீட்ரூட் எடை குறைக்க உதவுகிறது.
பொட்டாசியம் அளவை பராமரிக்க உதவுகிறது. பீட்ரூட் உடல் முழுவதும் அழற்சியை (Inflammation) எதிர்த்துப் போராடுகிறது.
இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது.