Mushroom and Weight Loss : காளான் சமையல் பிடிக்குமா? இப்படி சாப்பிட்டா உடல் எடை குறையுமா?
காளான் உடல் எடையைக் குறைக்க உதவுமா? என்ற கேள்வியே அனைவரையும் குழப்புகிறது அல்லவா? சில உணவுகள் கலோரிகளை எரிக்கவும், உடலில் தங்கிய கொழுப்பை அகற்றவும் உதவும் என்பது நமக்கு தெரியும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரத்திற்கு திருப்திகரமாக வைத்திருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட விடாமல் நம்மை பாதுகாக்கும்.
காளான்கள் கலோரிகளில் குறைவாக உள்ளன என்பதால், இது எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த உணவுகளில் ஒன்றாக மாறுகிறது.
காளான்களில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குடல் நன்றாக செயல்பட்டால், செரிமானம் நன்றாக இருக்கும். செரிமானம் சீராக இருந்தால் தேவையற்ற விஷயங்கள் வயிற்றில் சேர்வது குறித்து, எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் காரணமாக, இது ஆண்டி ஆக்ஸிடென்ட் அழுத்தத்துக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும் இது உடலில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
vகாளானில் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகின்றன. இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் இது குறைக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -