Cucumber Bitterness : வெள்ளரிக்காய் கசப்பு ஏறிப்போகுதா? எப்படி கசப்பை நீக்கலாம்.. இதோ டிப்ஸ்..
எளிமையாகச் சொல் வேண்டும் என்றால், கெட்டுப்போனதற்கான அறிகுறி தென்படும் வரை, மிதமான கசப்பான வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், அது சிலருக்கு அஜீரணம், வயிற்றில் அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும் மிகவும் பிரபலமான செயல்முறைகளில் ஒன்றாகும். விளிம்புகளை வெட்டி வெள்ளரிக்காய் மீது தேய்க்கவும். நல்ல அதிக அளவு வெள்ளை, நுரை போன்ற பொருட்கள் வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள். அப்பகுதியை துண்டாக்கி அகற்றவும்.
கியூக்கர்பிட்டாசின் தோலில் தான் அதிகளவில் வளரும். அதனாக் வெள்ளரியை உங்களது உணவில் சேர்ப்பதற்கு முன் அதை தோலை அகற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது
வெள்ளரியை வெட்டி அதில் சிறிதளவு வினீகர் அல்லது எலுமிச்சை சாறினை கலந்து 10ம்நிமிடங்களுக்கு ஊர விடவும். வினீகர் அல்லது எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலமானது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும்.
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. அதனால் வெள்ளரியை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை தரும்.
வினீகர் அல்லது எலுமிச்சை சாறு போலவே உப்பும் வெள்ளரிக்காயின் கசப்பை குறைக்கும். சிறிதளவு உப்பு சேர்த்து அதை 30 நிமிடங்களுக்கு ஊர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். அதனால் சுவையான மொறுமொறுப்பான வெள்ளரிக்காய் கிடைக்கிறது.
வெள்ளரியின் முனைகளை வெட்டி அதன் தோலை சுரண்டு உரிப்பதால் தோலில் உள்ள கியூக்கர்பிட்டாசின் நீக்கப்படுகிறது. அதனை இரு முறை செய்ய வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -