Baby Massage : பிறந்த குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்ய வேண்டும்?
குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது பாதுகாப்பாகவும் மென்மையாகவும் அதே சமயம் பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கக் கூடாது.
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் அதனால் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் மென்மையான அழுத்தம் கொடுத்தாலே போதுமானது. அதே சமயம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டாம்
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு காலில் இருந்து மசாஜை தொடங்குங்கள். கீழ் நோக்கி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு ஒய்வு எடுக்க வசதியாக இருக்கும்.மசாஜ் செய்யும் பொழுது குழந்தையின் கண்களோடு தொடர்பு கொள்வது அவசியம்.
குழந்தையின் வயிற்றில் மசாஜ் செய்யும் பொழுது தொப்புள்கொடி பகுதியில் ஏதேனும் தொற்றுகள் இருக்கிறதா? என்பதை கவனியுங்கள். குழந்தையின் முதுகு, கழுத்து பகுதிக்கு மெதுவாக நீண்ட நேரம் மசாஜ் செய்யுங்கள்
ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு மசாஜ் செய்வதனால், இரத்தம் ஓட்டம் சீராகும். அத்துடன் குழந்தை வளர்ச்சிக்கும் இது உதவும். மசாஜ் செய்யும் போது பாட்டு, ரைம்ஸ் பாடினால் குழந்தையின் கவனம் சிதறாமல் இருக்கும்
குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு குழந்தை நல மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். கோடை காலத்தில் குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன்பு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். குளிர் காலத்தில் குளிக்க வைத்த பிறகு மசாஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.