Rose Tea:தினமும் 2 கப் ரோஸ் டீ: என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
ரோஜாவில் உள்ள மூலக் கூறுகள் வயிறு நிறைந்த ஒருவித உணர்வைத் தருவதால் தேவையில்லாத நொறுக்கு தீணிகளைத் தேட விடாது. இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எத்ரிப்பு சக்தி தருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅஜீரணக் கோளாறுகளில் இருந்து தீர்வு தருகிறது. தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. உடலில் உள்ள உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது. மாதவிடாய் வலியால் துடிக்கும் பெண்ணாக நீங்கள் இருந்தால் ரோஸ் டீ குடிக்கலாம்
உங்களுக்கு தினமும் ரோஜாப்பூ கிடைக்குமென்றால் நீங்கள் ஃப்ரெஷான ரோஜாப்பூவில் இருந்து டீ போடலாம். அப்படிக் கிடைக்காது என்றால் ரோஜாவை வாங்கி காயவைத்து அதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.
. தினமும் ஒன்றரை கப் தண்ணீரில் ரோஜா இதழ்களைப் போட்டு அதை ஒரு கப் அளவு சுண்ட வைத்துக் குடிக்கலாம். வெறும் ரோஜா இதழ் மட்டும் அவ்வாறு குடிக்க விருப்பமில்லாவிட்டால் அத்துடன் கொஞ்சம் சாதாரண டீத்தூள் சேர்த்தும் குடிக்கலாம்.
இது மட்டுமல்லாமல் ஆவரம்பூ தேநீர், சங்குப்பூ தேநீர் ஆகியனவற்றையும் போட்டுக் குடிக்கலாம்.
ரோஜாப்பூவின் நறுமனமானது நமது மன அழுத்தங்களைப் போக்க உதவுவதாகவும் சித்தா, ஆயுர்வேதம் கூறுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -