One Clove Garlic :காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுங்க - இவ்வளவு நன்மைகளா?
பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கவழக்கம், சரியான தூக்கமின்மை, நொறுக்குத் தீணி ஆகியன உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடுகிறது. ஒரு மனிதனுக்கு சராசரியாக 130/80 Hg என்றளவில் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉணவின் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் என்று கூறுகிறார் டாக்டர் தீக்ஷா பாவ்சர் சவாலியா. இவர் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர். இவர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து ஓர் அறிவுரையைக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைப் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அது வாதத்தை கபத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
வெள்ளைப் பூண்டில் வோலடைல் ஆயில், கார்போஹைட்ரேட்ஸ், அரபிநோஸ், கேலக்டோஸ், வைட்டமின்கள், ஃபோலிக் அமிலங்கள், நயசின், ரைபோஃப்ளேவின், தயமின், அமினோ அமிலங்கள், என்சைம்கள் ஆகியன உள்ளன.
நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துகிறது மற்றும் உடல் எடையை பேண உதவுகிறது என்றார்.
உங்களுக்கு இதில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் நீங்கள் அன்றாடம் வெள்ளைப் பூண்டை உண்ணுங்கள். அன்றாடம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு வெள்ளைப் பூண்டு பல்லை மென்று உண்டு வாருங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -