Chettinad Squid Gravy: சுவையான செட்டிநாடு கடம்பா கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கனவா 500 கிராம், வெங்காயம் ௨௦, பூண்டு, எட்டு பல், இஞ்சி அரை விரல் அளவு, மல்லி இரண்டு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், வர மிளகாய் மூன்று, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, அண்ணாச்சி பூ ஒன்று, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், தண்ணீர், தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி சிறிது.
முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். நன்கு வறுத்த பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியை அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் தாளித்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு தனியாக அரைத்துவைத்த மசாலா கலவையை சேர்த்து மஞ்சள் தூள் சிறுது உப்பு சேர்த்து கிளறி விலதாவும்
மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக கழுவி வைத்துள்ள கனவா மீன் சேர்க்கவும்.
மசாலா கலவையின் சாறு கனவாய் இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா கிரேவி தயார்