குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகள் பாதுகாப்பானதா? உறுதி செய்ய சில டிப்ஸ்!
நடனம், இசை, பாட வகுப்புகள் என அனைத்தும் ஆன்லைனில் கற்றுக்கொடுக்கப்படுவதால், பெற்றோர்கள் தனி மொபைல்ஃபோன்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு இருக்கலாம்.குழந்தைகள் இணைய செயல்பாடுகளை பாதுகாப்பாக கையாளாவிட்டால், அது பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு வித்தாக மாறிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉங்கள் குழந்தை படிக்கும் அல்லது பார்க்கும் தளங்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும், தேவையில்லா வலைத்தள பக்கங்களில் நுழைவதை கண்டறிந்தால், உடனே அந்த பக்கங்களை அணுக முடியாதபடி முடக்கிவிடுங்கள்.
குழந்தைகளுடனான உறவை எப்போதும் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிக்கவேண்டும். நேரில் அறிமுகம் இல்லா நபரோடு நட்பு பாராட்டுவது எப்படி தவறோ, அதேபோல ஆன்லைனில் முன்பின் தெரியாதவறோடு பேசுவதும் பாதுகாப்பானது இல்லை என்பதை கற்றுக்கொடுங்கள்.
இதற்காக பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். ஐபோனின் ஸ்க்ரீன் டைம் என்ற வசதி மூலமாக குழந்தைகளின் இணைய நேரம் மற்றும் ஆக்சஸை கணக்கிட முடியும்.
privacy and sharing settings போன்றவற்றை மாற்றியமைப்பதன் மூலம் குழந்தைகளின் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதைத் தடுக்கமுடியும். குழந்தைகள் ஆன்லைன் செயல்பாட்டை மறைக்க முயற்சித்தல், வழக்கத்திற்கு மாறிய நடத்தைகள், அதீத கோபம், பதற்றம் , மனச்சோர்வு உள்ளிட்டவை காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -