இனிப்பு சாப்பிடும் ஏக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்
சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் ஒரு சிறு துண்டு இனிப்பு சாப்பிடாவிட்டால் நிறைவு ஏற்படாது. இதைத் தான் ஸ்வீட் கிரேவிங்ஸ் என்று சொல்கின்றனர்.
அதிகப்படியாக இனிப்பு சாப்பிடும்போது அதனால் உடல் பருமன், வீக்கங்கள், லைஃப்ஸ்டைல் நோய்கள் ஆகியன ஏற்படும்
உணவு இடைவேளையை அதிகமாக்காதீர்கள். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு உணவு உட்கொள்ளும்போது அது கார்போஹைட்ரேட்ஸை அதிகமாக உண்ணத் தூண்டும்.
ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் அவசியம். மனச்சோர்வு அழுத்தம் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் சுகர் கிரேவிங்ஸை இன்னும் அதிகமாக்கும்.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், ஸ்டீவியா, அத்திப் பழம், ப்ரூன்ஸ், பேரிச்சம்பழம், ஏப்ரிகாட்ஸ், கருப்பு திராட்சை ஆகியன சேர்த்துக் கொள்ளலாம்.
நாள்பட்ட சோர்வு, குடல் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியன ஏற்படும்.
ஆரோக்கியமான உணவு, அன்றாடம் உடற்பயிற்சி, போதிய ஓய்வு இருந்தால் போது எல்லா நோய்களும் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும்.