Diwali 2024: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி எப்படி கொண்டாட்டப்படுகிறது?
ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டு காலம் வனவாசம் சென்றிருந்ததை நாம் படித்திருப்போம். அவ்வாறு வனவாசம் சென்ற ராமர் 14 ஆண்டு கால வனவாசத்தை நிறைவு செய்து அயோத்திக்கு மீண்டும் திரும்பியதை வட இந்திய மக்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீதையுடனும். லட்சுமணனுடனும் மீண்டும் அயோத்தி திரும்பும் ராமரை வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக வரவேற்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த நாளை தீபாவளியாக வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஹரியானா, பீகாரில் உள்ளது. இந்த நாளில் அவர்கள் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த நாளை தாந்தரேஸ் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி நன்னாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றுகின்றனர். அந்த விளக்கை நெய்யில் ஏற்றுகின்றனர். மறுநாள் காலையில் அந்த விளக்கில் இருந்து வரும் மையை எடுத்து பெண்கள் தங்கள் கண்களுக்கு காஜலாக பூசிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் செழிப்புடன் வாழலாம் என்பது அவர்களின் ஐதீகம் ஆகும்.
தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் மாநிலங்களில் மகாராஷ்ட்ராவே முதன்மையானது ஆகும். அவர்கள் நான்கு நாட்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -