ஃப்ரிட்ஜில் வைத்தும் தோசை மாவு, தயிர் சீக்கிரம் புளித்துவிடுகிறதா.. இதை தடுப்பதற்கான டிப்ஸ் இதோ!
இட்லி, தோசை தென்னிந்திய கலாச்சாரத்தில் ஒன்றிப்போன உணவு வகையாக மாறிவிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெயில் காலத்தில், இட்லி மாவு எளிதாக புளித்துவிடும். மாவை ஃபிரிட்ஜிக்குள் வைக்க மறந்துவிட்டால் அவ்வளவுதான், புளித்த மாவை வாயில் கூட வைக்க முடியாத நிலை ஏற்படும்.
வெயில் காலத்தில் பெரும்பாலும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. அது போக தயிர் உறை ஊற்றுவதில் பலர் செய்யும் தவறு, பால் காய்ச்சிய அதே பாத்திரத்தில் உறை ஊற்றுவதுதான். அதனை தவிர்த்து வேறு பாத்திரத்தில் மாற்றி ஊற்ற வேண்டும்.
மேலும், நாம் அரைக்கும் மொத்த மாவிலும் உப்பு போடக்கூடாது. பயன்படுத்தும்போது எடுக்கும் கொஞ்ச மாவில் மட்டுமே உப்பு போட்டு பயன்படுத்தவேண்டும்.மொத்தமாக உப்பு போட்டால் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்துவிடும்.
மாவை புளிக்க விடாமல் செய்ய கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி இலையும் நமக்கு உதவும். மாவின் மேல் பகுதியில் இந்த இலைகளை போட்டு வைக்கவும்.
வெற்றிலையின் காம்பு மாவை புளிக்க விடாமல் தடுக்கும். மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது வெற்றிலைகளை காம்போடு சேர்த்து வைக்கவேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -