தேவையில்லாத கொழுப்பை குறைக்கனுமா? இந்த கஷாயத்தை குடிங்க... செய்முறை இதுதான்!
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அதற்கு முதலில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். அல்லது அதற்கு மாற்றாக,அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநன்றாக கலந்து கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் இந்த கஷாயத்தை இன்னமும் ஆரோக்கியமானதாக மாற்றவும் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பிழிந்து உட்கொள்ளலாம்.
நாம் பசியாக உணரும் போதெல்லாம், அல்லது உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த வெதுவெதுப்பான கஷாய நீரை உட்கொள்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும்.
மேலும், தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன.
இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -