Tomato Benefits:எலும்புகள் முதல் பளபள சருமம் வரை.. மேஜிக் செய்யும் தக்காளி
தக்காளியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் இருக்கிறது. அமெரிக்க விவசாயத் துறையின் கூற்றின்படி 100 கிராம் தக்காளியில் 110 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனால் உங்கள் எலும்புக்கு எப்போதும் வலிமை கிடைக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதக்காளியில் க்ரோமியம் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்வது நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும்.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அதிகரிக்காமல் தடுக்கும். உடல் சக்தி நிறைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்.
நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துவரும் சூழலில் சருமமும் கேசமும் வெகு எளிதாக மாசடைந்து விடுகிறது. உங்கள் டயட்டில் தக்காளியை எப்போதும் சேர்த்துக் கொள்வது மாசுபாட்டை எதிர்த்துப் போராடும்.
தாக்காளியில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் கூட அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கல் எச்சரிக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -