Garlic:உணவில் தினமும் பூண்டு சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகளா?
சமையலில் பூண்டு இடம்பெறாமல் இருக்காது. இஞ்சி பூண்டு பேஸ்ட், சில பூண்டுகளை இடித்து பொரியல் வகைகளில் சேர்ப்பது என்ற பழக்கம் இருக்கும். கடையில் இருந்து வாங்கி ஸ்டாக் செய்யும் பூண்டு ஃப்ரெஷ் ஆக இருக்க சில டிப்ஸ் இருக்கு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூண்டு குறைந்த கலோரி கொண்டது. ஒரு பல் பூண்டு அல்லது மூன்று கிராம் பூண்டில் 4.5 கலோரி இருக்கும். 0.2 கிராம் புரோட்டீன் கொண்டது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவும். இதய பாதிப்புகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது.இது உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டு LDL கொழுப்பை குறைக்க உதவும். இரத்ததில் அழுத்ததை குறைக்கும். செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த உதவும்.
பூண்டு குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். குடலில் உள்ள என்சைம்கள் சுரக்க உதவும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு வளர்ச்சிதை மாற்றதை அதிகரிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -