உடல் ஆரோக்கியத்துக்கும், தோல் புத்துணர்ச்சிக்கும்.. முக்கியமான 3 ஜூஸ் !
. சரியான சத்துகளை எடுத்துக்கொள்ளும் ஒரு ஆரோக்கியமான உடலின் தோலானது புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனைத் தடுப்பதை நம் ஆன்டி ஏஜிங் என்கிறோம். சத்தான உணவை உட்கொள்வது மூலம், பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது மூலமும் தேவையான ஊட்டச்சத்தை நாம் பெற முடியும். நம் தோலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று ஜூஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஊட்டச்சத்து அதிகம் கொண்ட ஒரு காய்கறி தான் கேரட். உடல் ஆரோக்கியத்தும், கண் பார்வை, தோல் புத்துணர்ச்சி ஆகியவற்றுக்கு கேரட் மிகச்சிறந்த ஒன்று. கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து ஏ தோலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து பளபளவென வைத்திருக்கிறது.
கேரட்டை நன்கு அரைத்து அதை தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதில் சிறிய அளவு ஐஸ் கட்டிகளையும், தேவையான அளவு எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம்.
மாதுளையில் உள்ள விட்டமின் சி மற்றும் கே, தோலில் புது செல் உருவாகி தோல் பளபளப்பாக உதவுகிறது. மாதுளையால் தோல் ஆரோக்கியம் பெற்று புத்துணர்ச்சியாகிறது.
வெள்ளரி மிக முக்கியமான ஊட்டச்சத்தை தருகிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. வெள்ளரியால் தோலில் உள்ள கருப்புள்ளிகள் நீங்குகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -