Garlic Skin Peeling : கை வலிக்காமல் பூண்டு தோலை ஈஸியாக அகற்ற சூப்பர் டிப்ஸ் இதோ!
பூண்டு அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டின் வாசனை மற்றும் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளன.
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது பல நோய்களின் தீவரத்தை குறைக்க உதவலாம்.சளி, இருமல் உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல நிவாரணம் தரும்.
மூக்கடைப்பு உள்ள குழந்தைகளின் கழுத்தில் பூண்டு மாலை அணிவித்தால் சற்று நிவாரணம் கிடைக்கலாம். பூண்டில் இருக்கும் அல்லிசின் கெட்ட கொழுப்பை கறைக்க உதவலாம்.
பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.பூண்டில் இருக்கும் ஜின்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். பூண்டு எலும்புகளை வலுவாக்க உதவலாம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது கண் மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுமாம்.
குடலில் இருக்கும் புழுக்களை அகற்றி ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இப்படிப்பட்ட பூண்டை நாம் அன்றாட சேர்த்து கொள்வது அவசியம்.
பூண்டை பொறுத்தவரை, அதன் தோலை உரிப்பதுதான் மிகவும் கடினமான விஷயம். அதை பிரித்து எடுப்பதற்குள் கை விரல்கள் ஒரு வழியாகிவிடும். இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் சூப்பர் டிப்ஸ் பற்றி பார்க்கலாம். முதலில் பூண்டை உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு பற்களின் மேற்பரப்பில் லேசாக எண்ணெய் தடவி சூரிய ஒளியில் படும் இடத்தில் 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் அதன் தோல் எளிதாக பிரிந்துவிடும்.