✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

இட்லி, தோசைக்கு சூப்பர் சைடிஷ்! பூண்டு சட்னியை இப்படி செய்து பாருங்க - சூப்பரா இருக்கும்

ஜான்சி ராணி   |  16 Jan 2024 01:34 PM (IST)
1

முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு 100 கிராம் பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2

அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ரெண்டு டேபிள் ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். (நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் இந்த சட்னி சுவையாக இருக்க வேண்டும். )

3

எண்ணெய் காய்ந்ததும் அதில் பத்து வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். (மிளகாய்கள் நிறம் மாறி விடக்கூடாது )இதனுடன் நிறத்திற்காக மூன்று காஷ்மீரி மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். வறுபட்ட மிளகாயை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

4

தக்காளி பழத்தை அதன் அடிப்பகுதியில் லேசாக கீறி முழு பழமாக எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.  தக்காளி பழம் நன்றாக சுறுண்டு வதங்கி வர வேண்டும்.

5

அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

6

வதக்கிய பூண்டு, வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் தக்காளி பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு  சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

7

கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்தால் போதும். சுவையான பூண்டு சட்னி தயார். இதை நீங்கள் இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • இட்லி, தோசைக்கு சூப்பர் சைடிஷ்! பூண்டு சட்னியை இப்படி செய்து பாருங்க - சூப்பரா இருக்கும்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.