Vinayagar Chathurthi Special : சத்துமிக்க ராகி கொழுக்கட்டை.. விநாயகர் சதுர்த்தி அன்று செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : வெல்லம் - 1 கப், தண்ணீர் - 1/4 கப், ராகி மாவு - 1 கப், பொடித்த அவல் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடித்த வேர்க்கடலை - 1/2 கப் கரைத்த வெல்லம், நெய், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை : ஒரு பானில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவு ராகி மாவை நன்றாக வறுத்து கொள்ளவும். ராகி வாசனை வரும் வரை வறுத்து, அரை கப் பொடித்த அவல் சேர்த்து கொள்ளவும்.
ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.அரை கப் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி சேர்க்கவும். சிறிது நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்து கொள்ளவும்.
மாவை கொழுக்கட்டை பிடித்து வைக்கவும்.இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.