Vazhaipazha Paniyaram : வாழைப்பழத்தில் பணியாரமா? கேட்கவே புதுசா இருக்கே!
தேவையான பொருட்கள் : தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 5, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் துண்டுகள், கோதுமை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் .
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம் துண்டுகளை சேர்த்து வெல்ல பாகு ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதன் பின் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறிவிடவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் கலந்து கரைத்துக் கொள்ளவும்.
அடுத்தது பணியார சட்டியை சூடாக்கி, நெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ மாவு கலவையை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் அசத்தலான வாழைப்பழ பணியாரம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -