French Toast : சுவையான முட்டையில்லாத பிரஞ்சு டோஸ்ட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : பிரட், வாழைப்பழம் - 3, பிரவுன் சுகர் - 1 மேசைக்கரண்டி, தேன் - 1 மேசைக்கரண்டி, பட்டை தூள், காய்ச்சி ஆறவைத்த பால் - 1/4 கப், வெண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், பிரவுன் சுகர், தேன், பட்டை தூள், காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து, எல்லாவற்றையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி வாழைப்பழ கலவையை ஆறவிடவும்.
அடுத்தது பேனை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து தவாவை சூடாக்கி கொள்ளவும்.
அடுத்தது பிரட் துண்டை வாழைப்பழக் கலவையில் இருபுறமும் பிரட்டி எடுத்து வெண்ணெய் தடவிய பேனில் வைக்கவும்.
அதன் பின் பிரட் மீது சிறிதளவு வெண்ணெய் தடவி குறைந்த தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து தேன் ஊற்றி பரிமாறினால் சுவையான பிரஞ்சு டோஸ்ட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -