Tawa Paneer : சுவையான தவா பனீர்.. எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்: பன்னீர் - 400 கிராம், தயிர் - 3 மேசைக்கரண்டி, கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 3 , பச்சை மிளகாய் - 3 , இஞ்சி பூண்டு ஒட்டு - 1 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 , மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி , காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள்- 1 தேக்கரண்டி, சாட் மசாலா - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், தயிர், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடம் மூடி வைத்து ஊறவைக்க வேண்டும்.
அடுத்தது ஒரு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பச்சை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, குடை மிளகாய், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
அடுத்தது மசாலாவில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான தவா பனீர் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -