Beetroot Kola Urundai : சுவையான பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 3, துருவிய தேங்காய் - 1 கப், எண்ணெய் தேவையான அளவு, கசகசா - 1/2 டீஸ்பூன், முந்திரி பருப்புகள் - 6, பச்சை மிளகாய் - 1 இலவங்கப்பட்டை - 1, கிராம்பு - 4, ஏலக்காய் காய்கள் - 4, பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன், உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு கடாயில் இலவங்கப்பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலக்காய் விதைகள், கசகசா, முந்திரி பருப்பு, சானா டல், தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை 5 நிமிடம் வதக்கும். அதன்பிறகு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
அதன்பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை பீட்ரூட்டுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். அதன்பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.
ஆறவைத்த பீட்ரூட்டை உருண்டையாக பிடித்து வைக்கவும். அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து என்னை ஊற்றி சூடானதும் உருண்டைகளை சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து உருண்டைகள் நிறம் மாறியதும் எண்ணெயிலிருந்து எடுத்து பிளேட்டில் பரிமாறினால் சுவையான பீட்ரூட் கோலா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -