Rajma Curry : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ராஜ்மா குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : ராஜ்மா பீன்ஸ் - 1 கப் ஊறவைத்தது, வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தக்காளி - 3 அரைத்தது, உப்பு - 1 தேக்கரண்டி, மாங்காய் தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், சர்க்கரை - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ராஜ்மா பீன்ஸை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஊற வைத்த ராஜ்மா பீன்ஸை குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
அடுத்தது கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்தது வேகவைத்த பீன்ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்.
அடுத்தது மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும். கடைசியாக சர்க்கரை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான ராஜ்மா குழம்பு தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -