Bread Toast : சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது, வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது, நறுக்கிய பூண்டு , பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி , மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி , இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, மோஸ்சரெல்லா சீஸ் - 1 கப் , கொத்தமல்லி இலை நறுக்கியது, வெண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும் .
அதன் பிறகு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, இட்டாலியன் சீசனிங், மொஸரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
ஒரு பிரட்டில் சிறிது வெண்ணெயை தடவி, பானில் சிறிது வெண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸை வைக்கவும்.
அடுத்தது பான் உள்ளே ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் கடாயை ஒரு மூடியால் மூடி, சீஸ் முழுவதுமாக உருகும் வரை டோஸ்ட் செய்யவும்.
2 நிமிடத்திற்கு பிறகு கடாயில் இருந்து பிரட் ஐ எடுத்து பிஸ் போட்டு பரிமாறினால் சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -