Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Squid Fish Masala : மணக்க மணக்க கனவா மீன் மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கனவா மீன் - 1 கிலோ, தேங்காய் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/4 கப், கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்தது கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்தது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். அதன்பின் ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கிளறிவிடவும்.அதன்பின் கரம் மசாலா தூள் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கனவா மீன் மசாலா தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -