Honey Garlic Cauliflower : இனிப்பு கொஞ்சம்..புளிப்பு கொஞ்சம்..ஹனி கார்லிக் காலிஃபிளவர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் - 1, மைதா - 1/2 கப், சோளமாவு - 2 மேசைக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 2 தேக்கரண்டி, எண்ணெய், , பூண்டு - 2, வெங்காயம் - 1 நறுக்கியது, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, வினிகர் - 2 தேக்கரண்டி, தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி, தேன் - 2 மேசைக்கரண்டி, வெங்காயத்தாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : சுடு தண்ணீரில் காலிஃபிளவரை போட்டு 5 நிமிடம் வேகவைத்து ஆராவிடவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு காலிஃபிளவரை மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிஃபிளவரை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மிளகு தூள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு சோளமாவு சேர்த்து கலந்துவிடவும்.
அதில் பொரித்து வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து கிளறிவிடவும். கடைசியாக தேன், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ஹனி கார்லிக் காலிஃபிளவர் ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -