Rice Bonda: அரிசி மாவு போண்டா எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 250 மி.லி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அரிசி மற்றும் உளுந்தை நன்கு அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அரைத்த மாவில் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை சின்ன சின்ன உருண்டைகளாக சேர்க்கவும்.
அடுத்தது எண்ணெயில் உள்ள போண்டாவை மீதமான தீயில் ஒரு நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அரசி போண்டா தயார்.அரிசி போண்டாவுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -