Rajma Chilla Recipe: ராஜ்மா சில்லா எளிதாக செய்வது எப்படி? இதோ ரெசிபி
ராஜ்மா வைத்து சில்லா செய்து சாப்பிடுவது ஊட்டச்சத்து நிறைந்தது என்று தெரிவிக்கின்றனர். சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். ஒரு எனர்ஜெட்டிக்கான உணவும் கூட. சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னென்ன தேவை? கடலை மாவு - ஒரு பெரிய கப் ராஜ்மா - ஒரு கப் துருவிய கேரட்- ஒரு கப் துருவிய தேங்காய் - அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2 மஞ்சள் - ஒரு டீ ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
ராஜ்மா 6-7 மணி நேரம் நன்றாக ஊறை வைத்து அதை நன்றாக வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். பிறகு ராஜ்மாவை நன்றாக மசிக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் ராஜ்மா, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். மாவு தயாரானதும் 5 நிமிடங்கள் கழித்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
தோசை கல்லில் மிதமான தீயில் மெலிதாக இல்லாமல் அடை மாதிரி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும்.இதற்கு தேங்காய் எண்ணெய், நெய் என உங்கள் விருப்பபடி எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவுதான். ஊட்டச்சத்துமிக்க ராஜ்மா சில்லா ரெடி!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -