Poha Kolukattai : அவல் கார கொழுக்கட்டை.. சிறந்த மாலை நேர ஸ்நாக் ரெசிபி!
ஒன்றரை கப் அவலை நன்கு கழுவி ஒன்று அல்லது ஒன்றரை கப் மோர் ஊத்தி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இதற்கிடையே, ஒரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து, சூடானதும் சிறிது கடுகு தாளித்து, ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், இதில் ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி சேர்க்கவும்.
பின் 4 பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு இறக்கவும்.
ஊற வைத்த அவலை கைகளால் மசித்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். அரை கப், துருவிய தேங்காய், கொழுக்கட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, தாளித்து வைத்துள்ள வெங்காயம் உள்ளிட்ட பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.
இந்த கலவையை உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் 5 நிமிடம் அவித்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்.
இந்த கொழுக்கட்டையை உங்களுக்குப் பிடித்த சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.