Paneer Jamun : பனீரில் குலாப் ஜாமுனா? செய்முறை விளக்கம் இதோ!
தேவையான பொருட்கள் : பால் - 1 1/2 லிட்டர், எலுமிச்சை சாறு, தண்ணீர் - 1/4 கப், சோள மாவு - 1 தேக்கரண்டி, பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, ரோஸ் கலர் ஜெல், சர்க்கரை - 2 கப், ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் பாலை நன்கு கொதிக்க வைத்து எலுமிச்சை சாரை பிழிந்து, பால் திரிந்ததும் பனீரை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பனீர், சோள மாவு, பால் பவுடர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு பிசையவும். அதன் பின் ரோஸ் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில், தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ், காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய் பொடி சேர்த்து பாகாக காய்ச்சசி கொள்ளவும்.
அடுத்தது பனீரை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்தது பனீரை பத்து நிமிடங்கள் பிறகு அடுப்புபிலிருந்து இறக்கி 3 மணி நேரம் பாகில் ஊற வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஜாமுன் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -