Oats laddu: ஆரோக்கியமான இனிப்பு சாப்பிட விருப்பமா? ஓட்ஸ் லட்டு ரெசிபி இதோ!
ஓட்ஸ் -1கப் பொடித்த சர்க்கரை கப் தேங்காய்த் துருவல் ½கப் நெய் 2 டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு 10 உலர் திராட்சை 10 ஏலக்காய்த் தூள் 1 ஸ்பூன் காய்ச்சிய பால் - ஒரு கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவாணலியில் நெய் ஊற்றி சூடான தும், முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே நெய்யில் ஓட்சை போட்டு மித மான தீயில் இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். சூடு ஆறிய பின்பு, ஓட்சை மிக்சியில் இட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, பொடித்த ஓட்ஸ், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள்,வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையுடன் சூடான பால் தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும்.
இது மிக எளிதாக செய்யக்கூடிய, சத்துமிக்க லட்டு. தேவைப்படும் போது எளிதாக செய்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -