Nethili Fish Fry : ருசியான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் -8 , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி, கடலை மாவு- 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு , மிளகு தூள் , தண்ணீர் , எண்ணெய்.
செய்முறை : முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பிறகு தாவி வைத்துள்ள மசாலாவை நெத்திலி மீனின் இருபுறமும் தடவி கொள்ள வேண்டும்
அதன் பிறகு ஒரு முப்பது நிமிடம் மீனை மசாலாவில் ஊற வைக்க வேண்டும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா தடவிய மீனை இரு புறமும் பொறித்து எடுத்தால் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்