Kothamalli Thogayal : சத்தான சுவையான கொத்தமல்லி துவையல்.. செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி - 2 கட்டு, நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி, கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 10 , பச்சை மிளகாய் - 4 , பூண்டு - 15 பற்கள், தேங்காய் - 1 கப் நறுக்கியது, புளி, உப்பு, தண்ணீர், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். அதன் பின் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அதன்பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதன்பிறகு 15 பற்கள் பூண்டு, நறுக்கிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்.
அடுத்தது புளி, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி கல்லுப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி கொள்ளவும். அதன் பிறகு மசாலா கலவையை நன்கு ஆற வைத்து கொள்ளவும்.
அடுத்தது ஆறவைத்த மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும், அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்து கிளறினால் அருமையான கொத்தமல்லி துவையல் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -