Falooda : அட்டகாசமான முலாம்பழம் ஃபலூடா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : முலாம்பழம் - 1 , சர்க்கரை - 2 தேக்கரண்டி , ஐஸ் கட்டிகள், சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், வேகவைத்த சேமியா , வெண்ணிலா ஐஸ்கிரீம், பிஸ்தா நறுக்கியது, பாதாம் நறுக்கியது.
செய்முறை: முதலில் சப்ஜா விதையை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது சேமியாவை தண்ணீரில் வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது முலாம்பத்தில் உள்ள விதைகளை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கு சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஃபலூடா செய்வதற்கு ஒரு பெரிய கண்ணாடி கிளாஸ் எடுத்துக்கொள்ளவும். அதில் ஊறவைத்த 2 டீஸ்பூன் சப்ஜா விதையை சேர்க்கவும்.
அடுத்தது வேகவைத்த சேமியா 2 டீஸ்பூன் சேர்க்கவும். அடுத்தது அரைத்து வைத்துள்ள முலாம்பழ சாறை சேர்க்கவும்.
அடுத்தது வெண்ணிலா ஐஸ் கிரீம் ஒரு ஸ்பூன் மற்றும் நறுக்கி வைத்துள்ள பாதம், பிஸ்தாவை சேர்த்தால் சுவையான முலாம்பழம் ஃபலூடா தயார்.