Mushroom Pulao:ஹெல்தி லன்ச் பாக்ஸ் ரெசிபி; காளான் புலாவ் எப்படி செய்வது?
அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி, நெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமெல்லியதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் சிறிதளவு மாறும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுத்து நறுக்கிய காளான்களை சேர்த்து கலந்து விட்டு உப்பு சேர்க்கவும். காளான் மற்றும் வெங்காயத்தை 10 நிமிடம் வதக்கவும்.
பிறகு ஊறவைத்த அரிசியை போட்டு கலந்துவிடவும். 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் கலந்த தேங்காய் பால் சேர்க்கவும்.
இப்போது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். குக்கரை மூடி ஆவி வர ஆரம்பித்ததும் குக்கர் விசிலை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும். சூடான சுவையான காளான் புலாவ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -