Masala Pasta: இரவு உணவுக்கு என்ன செய்யலாம்னு யோசனையா? மசாலா பாஸ்தா ட்ரை பண்ணுங்க!
பாஸ்தா வேக வைக்கும்போது, தண்ணீரில் கொதிக்கும்போது மட்டுமே போடவேண்டும். 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைத்தால் சரியாக இருக்காது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும்.பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்கவும் பின்னர் அவற்றை வடிகட்டவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் எடுக்கவும். நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்றாக வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்க்கவும். காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
. பின்பு கடாயை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் காய்கறிகளை சமைக்கவும். . 5 நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும். காரசாரமான மசாலா பாஸ்தா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -